1,90,000 தபால் ஊழியர்கள் அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்க தபால் ஊழியர் சங்கம் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஜூன் 25 அன்று துவங்கியது. பணி நீக்கம் இல் லாத பணி பாதுகாப்பு,அதிகபட்சம் 80 கி.மீ வரம்பு, பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியம், ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைக ளை முன்வைத்து சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரான் - சீனா புதிய ரயில் பாதை
துர்க்மெனிஸ்தான் வழியாக சீனா ஈரானை இணைக்கும் புதிய ரயில் பாதை ஜூலை 16 அன்று துவங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பேசிய ஈரான் ஜனாதிபதி மசூத் பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), மற்றும் யூரேசியா பொருளாதார ஒன்றியம் போன்ற அமைப்புகளுக்குள், ரஷ்யா மற்றும் சீனா வுடனான இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்து ழைப்புக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என குறிப் பிட்டுள்ளார்.
லூலாவிற்கு எதிராக அமெரிக்கா உளவு
பிரேசில் இடதுசாரி ஜனாதிபதி லூலா டி சில்வாவிற்கு எதிராக 50 ஆண்டுகாலம் அமெரிக்கா உளவு பார்த்தது அம்பலமாகி யுள்ளது. பிரேசில் நாட்டில் அமெரிக்காவின் உளவு வேலைகள் பற்றி பத்திரிகையாளர் பெர்னாண்டோ மொராய்ஸின் தெரிவித்துள் ளார். லூலா முதலாளித்துவ நாடுகளுக்கு எதி ரான சக்தியாக வருவார் என சிஐஏ தீவிரமாக கண்காணித்து வந்துள்ளது. இது பிரேசிலின் இறையாண்மைக்கு எதிரானது என கண்ட னங்கள் எழுந்து வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலிலிருந்து பைடன் விலக வேண்டும் - ஒபாமா
ஜனாதிபதி தேர்தலில் இருந்து பைடன் விலக வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரங்களில் பைடன் சுய நினைவை இழந்தது போல பேசி செயல்பட்டு வருகிறார் என அவர் மீது தொடர் விமர்சனங்கள் உள்ளன. மேலும் ஜனாதிபதி போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என 70 சதவீத ஜனநாயக கட்சியினர் விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உர்சுலா மீண்டும் ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவராக தேர்வு
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவராக உர்சுலா வான் டெர் லேயன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தீவிர வலதுசாரி ஆதரவாளராக உள்ள இவர் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு தொடர் ஆதரவாளராக இருந்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் வலதுசாரிகளின் பலம் அதிகரித்துள்ள நிலை யில் வலதுசாரி ஆதரவாளர் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நேட்டோ, ரஷ்யா மீது போரை முன்னெடுக்கும் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.