world

img

ஸ்பெயின்: 20 நாளில் இருமுறை கொரோனா தொற்று பாதிப்பு!

ஸ்பெயினில் 31 வயதான பெண் ஒருவருக்கு, 20 நாட்களுக்குள் இருமுறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 31 வயதான சுகாதார பெண் பணியாளர் ஒருவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா மாறுபாட்டிலும், ஜனவரியில் ஒமிக்ரான் மாறுபாட்டிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.    

இதன் மூலம், ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பது உறுதிப்படுத்தப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.    

ஸ்பெயினை சேர்ந்த அந்த பெண்ணுக்கு முதல் முறையாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டபோது எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. ஆனால், சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர் வெவ்வேறுபட்ட கொரோனா தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது தெரியவந்தது.    

இதையடுத்து அனைவருக்கும் இருமுறை கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்றும், வாழ்நாள் முழுவதும் என்று பார்க்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்புண்டு என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.