world

img

இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு - புதிய ஆய்வில் தகவல்

உலக முழுவதும் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் அதிகமான இரட்டை குழந்தைகள் பிறப்பதாக ஹியூமன் ரீபுரொடக்‌ஷன்’ என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 
அந்த ஆய்வு அறிக்கை கூறியதாவது ;
1980களில் இருப்பதைக் காட்டிலும் தற்போது இரட்டை குழந்தைகள் பிறப்பு மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதும் ‘ஐவிஎஃப்’ போன்ற மருத்துவத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வதுமே எனக் கூறப்படுகிறது.
135 நாடுகளில் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இரட்டை குழந்தைகள் பிறப்பு விகிதத்தை சேகரித்து அதை 1980-1985 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விகிதத்தோடு ஒப்பிடப்பட்டது. இதில் ஆயிரத்தில் 9 பிரசவங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 
ஆப்பிரிக்காவில் இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் உலகின் ஏழ்மையான நாடுகளில் இரட்டையர்களின் பிறப்பு அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

;