world

img

2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்

2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என விக்டோரியா மாநில அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.  

2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டிகளில் சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.  

ஆஸ்திரேலியாவில் இதுவரை 5 முறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது 6ஆவது முறையாகும். விக்டோரியா மாகாணத்தில் இந்த போட்டிகள் 2 ஆம் முறையாக நடைபெற உள்ளது. அதன்படி விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஜீலாங், பெண்டிகோ, பல்லார்ட், கிப்ஸ்லாண்ட்  ஆகிய பகுதிகளில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.  

நடைபெறவிருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் வருகிற ஜூலை மாதம் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 72 சர்வதேச நாடுகளை சேர்ந்த 5,054 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.