world

img

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 13 பெண் அமைச்சர்கள் பதவியேற்பு

ஆஸ்திடேலியாவில் முதல் முறையாக 13 பெண் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்றது.

அந்த நாட்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான லேபர் கட்சித் தலைவர் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், 11 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை தலைநகர் கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்றது.கவர்னர்-ஜெனரல் டேவிட் ஹர்லே அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த அமைச்சரவையில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், முதல் பெண் முஸ்லீம் மற்றும் முதல் பூர்வக்குடி பெண் அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.