world

img

2030க்குள் எய்ட்சை ஒழிப்போம்!

டர் எஸ் சலாம், பிப்.3- ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள  குழந்தைகளிடம் நிலவும் எய்ட்ஸ்  கொடிய நோயை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று  ஆப்பிரிக்க நாடுகளின் தலை வர்கள் உறுதி எடுத்துள்ளனர். எய்ட்ஸ் நோயின் தாக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் அளவில் இருந்து வருகிறது. இதை  முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டா லும், முழுமையான பலன் தர வில்லை. கூட்டு முயற்சிகள் குறை வாக இருந்ததே இதற்குக் காரண மாகச் சொல்லப்பட்டன. இந்தக் கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டும்தான் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர். இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்ட பல நாடுகள் ஒருங்கி ணைந்து செயலாற்ற முன்வந்துள் ளன. முதல் கட்டமாக, 12 நாடு களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றாக அமர்ந்து இதுகுறித்துக் கருத்துப்  பரிமாற்றத்தை மேற்கொண்டிருக் கிறார்கள். தான்சானியாவில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில் குழந்தை கள் மத்தியில் நிலவும் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவாக 2030-ஆம் ஆண்டைத் தீர்மானித்திரு க்கிறார்கள்.   தான்சானியா குடியரசு இந்தக்  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந் தது. எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் உயிரைப் பாதுகாப்பதற்கான சிகிச்சை தரப்பட வேண்டும்

என்றும், எய்ட்ஸ் வைரஸ் பாதிப்புள்ள பெண்களின் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் வைரஸ் பாதிப்பு இல்லா மல் இருப்பதை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்திப் பேசினார்கள். இதற்கான நடவடிக்கைகளை வரும் ஏழு ஆண்டுகளில் எடுப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் அங்கோலா,  கேமரூன், ஐவரி கோஸ்ட், காங்கோ  குடியரசு, கென்யா, மொசாம்பிக், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, தான்சானியக் குடியரசு, உகாண்டா,  ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் பங்கேற்றன. ‘‘டர் எஸ் சலாம் பிரகடனம்’’ ஒன்றை இந்தக் கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். அரசியல் உறுதியை நாம் அனைவரும் காட்ட வேண்டும் என்றும் அந்தத் தருணத்தில் தான்சானியாவின் துணை ஜனாதிபதி பிலிப் எம்பாங்கோ வலியுறுத்தினார். பரிசோதனைகளை முன் கூட்டியே செய்வது, சிகிச்சைக்கான இடைவெளிகளைக் குறைப்பது, எய்ட்ஸ் வைரஸ் தொற்றுவதைத் தடுப்பது மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய அம்சங்களை முன்னிறுத்தியிருக்கின்றனர். தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளுக்கு யுனிசெப் வர வேற்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் உடல் நலத்துடனும், வருங்காலம் குறித்த நம்பிக்கையுடனும் வாழ உரிமை உள்ளது என்பதை யுனிசெப் துணை இயக்குநர் அனுரிதா பெய்ன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

கியூபா சாதனை

உலகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது. எய்ட்ஸ் வைரசோடு வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளில் 52 விழுக்காட்டினருக்கு மட்டுமே உயிர் காக்கும் சிகிச்சை தரப்படு கின்றது. 2021-ஆம் ஆண்டில் புதிதாக எய்ட்ஸ் வைரஸ் தொற்றுப்  பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரம்  குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக் கிறது. எய்ட்ஸ் தொடர்பான மரணங்களில் 15 விழுக்காடு குழந்தைகளின் இறப்பாகவே உள்ளது. உலகிலேயே சோசலிச நாடான கியூபாவில் மட்டும்தான் பெரும் அளவில் உயிர்கள் காப்பாற்றப்படு கின்றன. எய்ட்ஸ் வைரஸ் பாதிப்பு உள்ளவர்களில் 83 விழுக்காட்டி னரின் உயிர்கள் பாதுகாக்கப்படு கின்றன. இதற்கு கட்டுப்பாட்டுக் கான சிகிச்சைகளும், தடுப்பதற்கான திட்டங்களுமே காரணங்களாகும். கடந்த 30 ஆண்டுகளாகத் தீவிரமாக இந்தப் பிரச்சனையில் கியூப அரசு கவனம் செலுத்தி வந்திருக்கிறது.