world

img

66 குழந்தைகள் மரணம்: 4 இருமல் மருந்துக்கு தடை

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ட்விட்டர் பகுதியில் அதன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்தியாவின் மெய்டன் பார்மக்யூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சளி மற்றும் இருமல் சிரப் இந்த நான்கு மருந்துகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

காம்பியா நாட்டில் உயிரிழந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்துகள் இந்தியாவில் ஹரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மக்யூட்டிக்கல்ஸ் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Promethazine Oral Solution, Kofemalin Baby Cough Syrup, Makoff Baby Cough syrup மற்றும் Magrip N Cold Syrup என இந்த நான்கு வகை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

;