world

img

ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலத்திற்கும் முன்பு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி 5.3 ரிக்டர் அளவிலான 18 ஆம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த  17 ஆம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எனினும், பெரிதாகச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

;