world

img

உலக அளவில் யூடியூப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் அவதி

உலக அளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதியடைந்தனர். 
பிரபல சமூக வலைதளமான யூடியூப் கணக்கில் திடீரென  உள் நுழைய முடியாமலும், ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப் சேவையை பெற முடியாமலும் போனது. குறிப்பாக நேவிகேஷன் பார் பகுதியை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து ஏராளமானோர் சமூக வலைதளங்களில் எழுதி இருந்தனர். இதைத்தொடர்ந்து யூடியூப் நிறுவனம் பிரச்சனை ஏற்பட்டதை உறுதி செய்ததோடு சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து சில மணி நேரங்களில் தொழில் நுட்ப  கோளாறு சரி செய்யப்பட்டதாக யூடியூப் நிறுவனம் அறிவித்தது.