world

img

உலகின் மிக மோசமான அமெரிக்க போர்க் குற்றவாளி ஹென்றி கிஸ்ஸிங்கர் மரணம்

நிக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது வெளியுறவுத்துறை ஆலோசகராக இருந்தவர் கிஸ்ஸிங்கர். 100 வது வயதில் தனது  இல்லத்தில் புதன்கிழமையன்று மரணமடைந்தார். உலகின் பல நாடுகளில் நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கும், அமெரிக்கா நடத்திய போர்க் குற்றங்களுக்கும் படுகொலை களுக்கும் காரணமானவர் இவர்.  அவற்றுள் முக்கியமான சில : 1. சிலியில் அலெண்டே தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சியை திட்டமிட்ட இராணு வச்  சதி வன்முறை மூலம் கவிழ்த்து  பினோசெட் தலைமையிலான  சர்வாதிகாரத்தை கொண்டு வந்து பல்லாயிரக்கணக்கான சிலி  மக்கள் மற்றும் இடது சாரிகள் தூக்கிலிடப்பட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டனர்  மற்றும் அவர்க ளின் குழந்தைகள் கடத்தப்பட்டு அடை யாளங்கள் அற்றவர்களாக ஆக்கப்பட்டனர். 2. அர்ஜெண்டினாவில்  சர்வாதிகார  ஒடுக்கு முறைக்கு  உதவி செய்தும் வழிகாட்டியும் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டனர். 3. இந்தோனேசிய  மத அடிப்படைவாத இராணுவம் லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளையும் அவர்களுக்கு ஆதரவான  பொதுமக்களையும் கொலைசெய்ய திட்டமிட்டது அப்போது,  இந்தோ னேசியாவை ஆக்கிரமித்து சந்தையாக்க வேண்டும் என   திட்டமிட்ட அமெரிக்கா ,அந்நாட்டு ராணுவ தளபதி   சுகர்னோவிடம் “நீங்கள் எதைச் செய்தாலும் அது விரைவில் வெற்றியடைவது முக்கியம்” என்று கூறி  படுகொலைகளுக்கு ஆலோசனை வழங்கியது கிஸ்ஸிங்கர்.   4.  தனது சொந்த அரசியல் லாபத்திற்காக 1969-1973 வியட்நாம் போரின் போது  அமைதிப் பேச்சுக்களை முறித்தவர் கிஸ்ஸிங்கர். லாவோஸ் மற்றும் கம்போடியாவில் போரை தீவிரப்படுத்தியதோடு “மனிதன் மற்றும் நிவார ணப் பொருட்கள் வாகனங்கள் உட்பட எது நகர்ந்தாலும் அதன் மீது  குண்டுகளை வீச வைத்தார்.மேலும் கிஸ்ஸிங்கர் திட்டத்தால்  20-30 லட்சம் வியட்நாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 5. கம்போடியாவில் அமெரிக்க ராணுவம்  கண் மூடித்தனமாக ஆயிரக்கணக்கான குண்டுக ளை பரந்த அளவிலான நிலப்பரப்பில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது  வீசி, 5 லட்சத்திற் கும்  அதிகமானோரை படுகொலை செய்ததும் கிஸ்ஸிங்கரின் திட்டமே.