world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காணாமல் போன  விமானம் விபத்தில் சிக்கியது

அலாஸ்காவில் 10 பயணிகளுடன் காணாமல் போன விமானம் விபத்துக் குள்ளானது எனவும் அதில் பயணித்த 10 நபர்களும் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் விமான நிலையத்துடனான தொடர்பை இழந்துள்ளது. மேலும் விமானம் அபாயச் சூழலில் இருந்ததற்கான எந்த அபாய அழைப்புகளும் விமானத்தில் இருந்து வர வில்லை. விபத்துக்கான முழு விவரங்களும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

கனிமங்களை கொள்ளையடிக்க திட்டம்:  டிரம்ப்புக்கு ட்ரூடோ எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவை ஆக்கிரமித்து அமெ ரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைப் பேன்  என டிரம்ப் பேசிவரும் நிலையில் ட்ரூடோ இவ்வாறு பேசியுள்ளார். மேலும் கனடா  மண்ணில்  உள்ள மதிப்பு வாய்ந்த கனிமங்கள் உள்ளிட்ட பல இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் எண்ணத்தில் தான் கனடாவை ஆக்கிர மிக்கப்போவதாக அறிவித்துள்ளார் எனவும் ட்ரூடோ கூறியுள்ளார். 

அமெரிக்க வாழ்க்கையை  மறுபரிசீலனை செய்யும் இந்தியர்கள் 

அமெரிக்காவில் கல்வி முடிந்து வேலை தேடும் மாணவர்கள்  தற்போது செய்து வரும் பகுதிநேர வேலையை கைவிடும் கட்டா யத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசா நிரா கரிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில், ஆவணங்கள் சரிபார்க்க நடைபெறும்  தீவிரமான தேடுதல் மற்றும் வேலை உறுதியா வதில் உள்ள  நிச்சயமற்ற தன்மை ஆகிய வற்றால் பல இந்திய மாணவர்கள் தங்கள்  அமெ ரிக்க கனவு என்ற ஆசையை மறு பரிசீலனை செய்யும் காலம் வந்து விட்டது எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

பனாமாவுக்கு நெருக்கடி: அமெரிக்காவிற்கு சீனா கண்டனம் 

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு  பொருளாதாரத் திட்டத்தில் இருந்து பிற நாடுகளை வெளியேற்ற அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்தை சீனா கண்டித் துள்ளது.சீனாவுடன்  பனாமா ஏற்படுத்தி இருந்த ஒப் பந்தத்தை புதுப்பிக்காமல் வெளியேறியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவை கண்டித்துள்ளது. அழுத்தம் மற்றும் வற்புறுத்தல் மூலமாக பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின்  ஒத்துழைப்பை மதிப்பிழக்கச் செய்யும் மற்றும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அமெரிக்கா வின் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கண்டித்துள்ளார்.

‘அமெரிக்கா அச்சுறுத்தினால்  நாங்களும் அச்சுறுத்துவோம்

அமெரிக்கா அணுசக்தி குறித்த பேச்சை தொ டங்கிய நிலையில் அவர்களது பேச்சு  புத்தி சாலித்தனமாக இல்லை என ஈரான் மதத் தலை வர் அயத்துல்லா அலி கொமேனி தெரிவித்துள் ளார். மேலும் இதுபோன்ற அரசுடன் எந்த பேச்சு வார்த்தையும் இருக்கக்கூடாது எனவும் அவர்கள் எங்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கினால் நாங்களும் அவர்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குவோம் என அவர் தெரிவித்தார்.   ஈரானுக்கு அதிக நெருக்கடிகளை உருவாக்கும் வகையிலான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு இவ்வாறு கொமேனி அறிவித்துள்ளார்.