world

img

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் இயக்குநர்!

உலக வர்த்தக அமைப்பின் வரலாற்றில் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக நைஜீரியாவைச் சேர்ந்த  என்கோசி ஓகோன்ஜா இவெலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பிற்கு என்கோசி ஒகோன்ஜோ-இவெலா தேர்வு செய்யப்படுவதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் தற்போது 66 வயது நிரம்பிய  என் கோசி ஒகோன்ஜோ-இவெலா,164 நாடுகளுடைய பிரதிநிதிகளால், இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து “கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மற்றும் சுகாதார விளைவுகளில் கவனம் செலுத்தி, உலகளாவியப் பொருளாதாரம் மீண்டும் அதன் வழியில் பயணிப்பதை உறுதி செய்வதே தனது முதன்மைப் பணியாகும்.
எங்கள் அமைப்பு பலவிதமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதேசமயம், அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த அமைப்பை வலுப்படுத்தி, நடைமுறை உலகின் எதார்த்தத்திற்கு ஏற்ப இந்த அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
 
 

;