பெய்ஜிங், ஜூன் 20- எங்களுடனான உறவில் நீங்கள் பேச்சுவார்த்தையைத் தேர்வு செய்கிறீர்களா அல்லது மோதல் போக்கைத் தேர்வு செய்கிறீர்களா என்று சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் டோனி பிளிங்கென்னிடம், சீன வெளி யுறவுத்துறை அதிகாரிகளில் ஒருவ ரான வாங் யி வினா எழுப்பினார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்றதில் இருந்து முதன்முறையாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா வுக்கு பயணம் மேற்கொண்டுள் ளார். இதற்கு முன்பு அவரது பய ணத்திற்கு திட்டமிட்டிருந்தபோது, பலூன் விவகாரம் வெடித்ததால், அந்தப் பயணம் ரத்தானது. முதல் கட்டமாக பல்வேறு மூத்த உயர் அதிகாரிகளை தற்போது அவர் சந்தித்து வருகிறார். சீன ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பும் நடக் கிறது. இந்தப் பயணம் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் எதிர் மறைக் கருத்தைப் பதிவு செய்து வருகின்றன. பிளிங்கென் பயணத்தின் முதல் நாளில், சீன வெளியுறவுத்துறை விவகார ஆணையத்தின் இயக்குந ரான வாங் யி, அவரைச் சந்தித்தார். இருவரின் உரையாடல்களில் பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவா திக்கப்பட்டது. மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, சீனத்தரப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்து வெளிப்படை யாகக் கருத்து தெரிவிக்கப்பட்டது. சீனாவுடனான எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்பதை அமெரி க்கத் தரப்புதான் தீர்மானிக்க வேண்டும் என்றும், மோதல் போக்கு அங்கிருந்துதான் இருக் கிறது என்றும் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள்.
பிளிங்கெனிடம் நேரடியாகவே வாங் யி இந்த வினாவை எழுப்பி யிருக்கிறார். சீனாவுடன் பேச்சு வார்த்தை வேண்டுமா, மோதல் போக்கு வேண்டுமா என்று அமெரிக்கா முடிவு செய்து கொள்ள வேண்டும். இதில் நீங்கள் எதைத் தேர்வு செய்கிறீர்கள் என்று வின வினார். மேலும் பேசிய அவர், “கீழ்நோக்கிச் சென்று கொண்டி ருக்கும் சீன-அமெரிக்க உறவை மீட்டெடுக்க வேண்டும். ஆரோக்கிய மான மற்றும் நிலையான உறவை நோக்கி செல்ல வேண்டும். மேலும் சரியான பாதையை இரு தரப்பும் இணைந்து கண்டறிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தவறான பார்வை
சீன-அமெரிக்க பதற்றங் களுக்கு அடிப்படையான காரணமே அமெரிக்காவின் தவறான பார்வையேயாகும் என்று வாங் யி சுட்டிக்காட்டியிருக்கிறார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “சீன தேசத்தைப் பற்றிய தவ றான கருத்து மற்றும் தவறான கணக்கீடு ஆகியவையும், பெய்ஜிங் அதிகாரிகள் பற்றிய தவறான பார்வையுமே பதற்றங்கள் உரு வாவதற்குக் காரணங்களாக உள்ளன. பொறுப்பான அணுகு முறையே நமக்கு அவசியமாகும்” என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் உயர்மட்ட அரசியல்வாதி ஒருவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தாலும், அதனால் பெரும் மாற்றம் எதுவும் வந்துவிடாது என்று அமெரிக்கத் தரப்பில் இருந்தே கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் வெளி யுறவுத்துறை அமைச்சர் சீனா வுக்குப் பயணம் மேற்கொண்டுள் ளார். தனது பயணத்தைத் தொடங் கும் முன்பாக, சீனத்தரப்புடன் தக வல் தொடர்பை வைத்துக் கொள்ளா தது பெரும் தவறாகும். இந்தப் பயணத்தில் அந்தத் தகவல்தொட ர்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்போம் என்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
சமரசம் இல்லை
தைவான் பிரச்சனையில் எந்த வித சமரசத்தையும் சீனா ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்த வாங் யி, ஒரே சீனம் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா, அதிலிருந்து பின்வாங்கக்கூடாது என்றார். மேலும் பேசிய அவர், “தைவான் விவகாரத்தில் சீனா எந்தவிதமான சமரசத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அமெரிக்காவுடனான உறவில் ஆபத்தான கோடாக தை வான் உறவு உள்ளது. சீன-அமெரிக்கா வெளியிட்ட மூன்று கூட்டறிக்கைகளில் ஒரே சீனம் என்பது வலியுறுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டார். பிளிங் கென்னுடனான இந்த உரையாடல் குறித்து சீன வெளியுறவுத்துறை விரிவான அறிக்கையை வெளி யிட்டிருக்கிறது.