அமெரிக்காவின் தடைகளால் வெனிசுலாவில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் கடுமையான விலையுயர்வு இருந்தது. தலைநகர் காரகசில் ஈரானின் மெகாசிஸ் சூப்பர் மார்க்கெட் இந்த நெருக்கடிக்கு சிறிய தீர்வைத் தந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் 2 ஆயிரத்து 500 பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
காரகஸ், நவ.16- உலகில் பெட்ரோலியம் அதிகமாக இருக்கும் நாடுகளான வெனிசுலாவும், ஈரானும் இணைந்து தங்கள் மேல் சட்டவிரோதமாக விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தடைகளை உடைக்க முடிவு செய்துள்ளன. ஓபெக்(பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு) நாடு களில் வெனிசுலாவும், ஈரானும் முக்கிய மான உறுப்பினர்களாவர். உலகிலேயே மிக அதிகமான பெட்ரோலிய இருப்பு வெனிசுலாவில்தான் உள்ளது. ஆனால், அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதோடு தனது உற்பத்தி மற்றும் சுத்திகரிப்புப் பணிகளை செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது. சுத்திகரிப்பு நிலையங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியமும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டிய தேவையும் உள்ளது. ஈரான் மீதும் அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்திருக்கிறது. கிட்டத் தட்ட வெனிசுலாவும், ஈரானும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள் கின்றன. இந்நிலையில் இந்த இரு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்திருக் கின்றன. அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியான ஒருங்கிணை ப்புக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கு வெனிசுலாவின் முன் னாள் ஜனாதிபதி சாவேஸ் அடித்தளம் அமைத்திருந்தார். அவருக்கு அடுத்த படியாக பொறுப்புக்கு வந்த நிகோலஸ் மதுரோ, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்.
ஜூன் 2022இல் இரு நாடுகளும் ஒத்துழைப்புத் திட்டத்தில் கையெழுத் திட்டன. 20 ஆண்டுகளுக்கான இந்தத் திட்டத்தில் வெனிசுலாவின் சுத்திகரிப்பு நிலையங்களைப் பராமரிக்கும் பணிக்கு ஈரான் உதவி செய்யும் அம்சமும் உள்ளது. வெனிசுலாவிற்கு நான்கு எண் ணெய் வாகனங்களைத் தரவும் ஈரான் முன்வந்திருக்கிறது. வாராந்திர விமானப் பயணங்களும் தொடங்கியுள்ளன. இரு தலைநகரங்களுக்கிடையில் தொடங்கப்பட்டுள்ள இந்த விமானப் பயணம் நல்ல முறையில் இயங்குவ தால் கூடுதல் விமானப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப் போகிறார்கள். எண்ணெய்க் கப்பல்களையும் வெனி சுலாவுக்கு ஈரான் அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் ரோஸ்நெட் நிறுவனத்தோடு வெனிசுலா உடன்பாடு செய்திருந்தது. உக்ரைன் நெருக்கடியால் அமெரிக்கப் பகுதியில் ரோஸ்நெட் நிறுவனத்தை இயங்க விடாமல் அமெரிக்கா செய்து விட்டது.
இதனால் ஈரானுடனான உடன் பாட்டில் வெனிசுலா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பெட்ரோலியப் பொருட்களையும் ஈரான் மூலமாக வர்த்தகம் செய்யப் போகிறார் கள். இதற்கான பெரிய திட்டங்களை உரு வாக்கி அமெரிக்காவின் தடைகளை உடைப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. கூட்டுப் பொருளாதார ஆணையம் வெனிசுலா, ஈரான் ஆகிய இரு நாடு களுக்கிடையே ஒரு கூட்டுப் பொருளா தார ஆணையம் உருவாக்கப்பட்டுள் ளது. இதன் கூட்டம் தற்போது நடை பெற்று வருகிறது. வெனிசுலாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோன் வேலஸ்குவேஸ் தலைமை யில் ஒரு குழு ஈரான் தலைநகர் டெஹ்ரா னுக்கு வந்துள்ளது. செய்தியாளர்களி டம் பேசிய அவர், “சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் பெரும் திட்டங்களை உருவாக்கியுள்ளோம். பெரும் சவால் களும் உள்ளன. இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது மற்றும் பரஸ்பர உதவி ஆகியவை கனவுகளை நனவாக்க உதவும்” என்றார். ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆயிரம் கார்கள் வெனிசுலாவில் இறக்குமதியாகி யுள்ளது. மேலும் வாகனங்களை வாங்க வும் முடிவு செய்திருக்கிறார்கள். இரு தரப்பு வர்த்தகம் மற்றும் ஈரான் மூலமாக ஆசிய நாடுகளுடனான வர்த்தகம் என்று பல முனைகளில் வெனிசுலா திட்ட மிட்டிருக்கிறது. அமெரிக்காவோ, சீனா-ரஷ்யா-கியூபா-வெனிசுலா-ஈரான் என்ற அச்சு உருவாவதாகக் கூறியுள்ளது.