world

img

ஈரானிடம் சூப்பர் சானிக் ஏவுகணை

அமெரிக்கா கலக்கம் டெஹ்ரான், ஆக.11- சூப்பர்சானிக் ஏவுகணையை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதையடுத்து, அமெரிக்கா கடும் அதிர்ச்சி யில் உறைந்துள்ளது. சவூதி அரேபியா - ஈரான் இடையிலான 7 வருட பகையை,  தீவிர முயற்சியால் சீனா முடிவுக்கு கொண்டு வந்த நிலை யில், மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டின் வசம் முக்கிய தொழில்நுட்பம் ஒன்று கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சந்தேகச் செய்திகளை கடந்த வாரம் வெளி யிட்டன.  இந்நிலையில் சூப்பர்சானிக் ஏவுகணையை உரு வாக்கும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது. சூப்பர்சானிக் இன்னும் சோதனையில் இருப்பதாகவும், விரைவில் சோதனையின் வெற்றி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவன மான தஸ்னிம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தொழில் நுட்பத்தை எந்த நாடு வழங்கியது என ஈரான் அரசு கூற வில்லை. ஈரானிடம் தற்போது சானிக் வகை ஏவுகணை மட்டுமே உள்ள நிலையில், பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் பாயும் சூப்பர் சானிக் ஏவுகணை இருப்பதாக கூறியிருப்பது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.