world

ஜெலன்ஸ்கியை கைவிடத் துவங்கியதா அமெரிக்கா?

உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க - ரஷ்ய அதிகாரிகள்  சவூதி அரே பியாவில் நடத்திய பேச்சுவார்த்தையில் சீனாவை தனிமைப்படுத்த ரஷ்யாவுடன் பொருளாதார உறவுகளை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி யை அமெரிக்கா கைவிடத்துவங்கியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என அழுத் தம் கொடுக்க துவங்கியுள்ளதுடன் ஜெலன்ஸ்கியை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் டிரம்ப்.  உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலை வர்களை அழைக்கவில்லை எனவும் நாங்கள் இல்லாமல் எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம் எனவும் ஜெலன்ஸ்கி விமர்சித்து இருந்தார்.

மேலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற் கான முயற்சிகள் “நியாயமானதாகவும் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தை ஐரோப் பியா நாடுகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன் ஸ்கியை, டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். “பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்காததால் அவர்கள்  வருத்தப்படு வதாக  நான்  கேள்விப்பட்டேன். சரி, நாங்கள் உங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வில்லை. மூன்று வருடமாக போரில் ஈடுபட்டிருந்த நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். நீங் களே போர் நிறுத்தத்திற்காக ஒரு ஒப்பந்தத்தை செய்திருக்க வேண்டியது தானே”  எனவும் ஜெல ன்ஸ்கியை சர்வாதிகாரி எனவும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 மேலும் உக்ரைனில் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார்.  உக்ரைனின் தலைநகரம் கீவ் உட்பட ஒட்டு மொத்த உக்ரைன்  நகரங்களையும்  “மிக விரை வாக” அழிக்கும் திறன் ரஷ்யாவிற்கு உள்ளது. ஆனால் அவர்கள்  அவ்வாறு செய்ய விரும்ப வில்லை.உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த பணத்தில் ஊழல் நடந்துள்ளது என குறிப்பிடும் வகையில், தாங்கள் கொடுத்த பணத்தில் பாதி எங்கே போனது என  ஜெலன்ஸ்கிக்கு தெரியாது என்று கூறிய அவர், உக்ரைன் அமெரிக்காவிற்கு அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது அப்பணம் எங்கே சென்றது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்  என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஜெலன்ஸ்கிக்கு 4 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந் தார்.

இதனை மறுத்த ஜெலன்ஸ்கி, தனக்கு  57 சத வீதம் ஆதரவு இருப்பதாக  அவருக்கு ஆதரவாக அந்நாட்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டி,தன்னை யாராலும் பதவியை விட்டு நீக்க முடியாது என தெரிவித்துள்ளார். எனி னும் தேர்தல் நடத்தப்பட்டால் ஜெலன்ஸ்கி வெற்றி  பெற வாய்ப்பு இல்லை எனவும் ரஷ்ய ஆதரவு ஜனாதிபதி பதவி ஏற்க வாய்ப்புள்ளது எனவும் தெரிய வருகிறது. 2025 மே மாதம் வரை ராணுவச்சட்டம் நீடிக் கப்பட்டுள்ளதால் உக்ரைன் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்து வருகின்றது