மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சில போலி பதிப்புகளை சமீபத்தில் கண்டறிந்துள்ளது.
நவீன உலகில் தற்போது ஆண்ட்ராய்டு போன்கள் வைத்திருப்போர் வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஹேய் வாட்ஸ்அப் என்ற செயலி மக்களிடம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி வில் கேத்கார்ட்டின் கூற்றுப்படி, புகழ்பெற்ற வாட்ஸ்அப் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருப்பதாக கூறும் சில தீங்கிழைக்கும் பயன்பாடுகளை நிறுவனத்தின் பாதுகாப்பு குழு சமீபத்தில் கண்டறிந்துள்ளது. அதனால் வாட்ஸ்அப் பெயரில் வரும் வேறு எந்த வாட்ஸ்அப்பையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், பயனர்களே, உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதன் அதிகாரப்பூர்வ http://Whatsapp/com/dl என்ற இணையதளத்தில் நேரடியாக சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் பெயரில் வரும் அனைத்து செயலியும் பயன்படுத்த நேரிட்டால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். நாங்கள் வாட்ஸ்அப் போன்ற சேவைகளை வழங்குவதற்காக கூறும் சில போலியான செயலிகளை பாதுகாப்பு ஆய்வுக்குழுவுக்குப் பரிந்துரைத்தோம்.
அதன்படி “Heymods” என்ற டெவலப்பரின் “Hey Whatsapp” போன்ற செயலிகள் ஆபத்தானவை. இதுபோன்ற செயலிகள் உங்களது தகவல்களை திருடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மோசடி செயலியாகும்.
எனவே, பாதுகாப்பு மீறல்களைத் தவிர்க்க இந்த போலி மோட் செயலிகளை தங்கள் தொலைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.