world

img

தொழிற்சங்கங்களை நோக்கி அணிதிரளும் அமெரிக்கத் தொழிலாளர்கள்

வாஷிங்டன், டிச.30- 2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா வில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு சில தோல்விகள் கிடைத்தாலும், பெரு மளவில் வெற்றி கிடைத்துள்ளது.  தொழிற்சங்க உணர்வு தொழிலா ளர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அரசுகளும், நிர்வாகங்களும் கவனமாக இருந்து வருகையில், தற்போது எழுந்துள்ள நெருக்கடி தொழிற் சங்கங்களின் இருப்பை உறுதிப்படுத்தி விட்டது. தொழிலாளர்களின் கோரிக்கை களை வெல்ல ஒன்று திரண்டு போராடு வதே அவசியம் என்பதை 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தங் கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.  ஸ்டார்பக்ஸ் மற்றும் அமேசான் நிறு வனங்களில் தொழிலாளர்கள் சங்கமா கத் திரண்டது முக்கியமான அம்சமாகும். இந்த இரண்டு நிறுவனங்களையும் தாண்டிப் பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர்களின் ஒற்றுமை நிகழ்ந்தி ருந்தாலும், உலகம் முழுவதும் தொழிற் சங்க அரங்குகளில் பெரும் தாக்கத்தை இவை ஏற்படுத்தின. கல்வி, சுகாதார நலன், உணவு விநியோகம் மற்றும் சில்லரை வர்த்தகம் ஆகிய துறைகளில் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு களால் உருவான விலையுயர்வு, பணியிட சூழல்கள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கை களை வைத்துத் தொழிலாளர்கள் போரா டினார்கள்.

மேற்கத்திய நாடுகளில் போராட்டங்க ளை நடத்த தொழிலாளர்களிடம் வாக் கெடுப்பு நடத்துவது வழக்கமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் வாக்கெடுப்புகள் நடப்பது அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 1,249 தொழிற்சங்கத் தேர்தல் கள் நடந்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் நடந்ததைவிட 50 விழுக்காடு அளவுக்கு அதிகமான தேர்தல்கள் நடத்தப்பட்டி ருக்கின்றன. தொழிற்சங்கங்களை நோக்கி தொழிலாளர்கள் வருவதும் அதிகமாகியிருக்கிறது. தொழிற்சங்கங்க ளில் இணைந்து செயல்படுவதற்கு ஆத ரவாக 72 விழுக்காடு தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டில் 61 விழுக்காடாக இருந்தது. எப்போதும் இல்லாத அளவில் பொது மக்களின் ஆதரவும் தொழிற்சங்கங்க ளுக்கு இந்த ஆண்டில் கிடைத்தது.

தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள னர். சிதறிக்கிடந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்த தொழிற்சங்கம், சங்க அங்கீகாரத் தேர்தல்களை முறையாக நடத்த வைத்தது. ஐந்து தேர்தல்கள் நடந்த தில், ஒருங்கிணைந்த சங்கம் நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தொழிற்சங்கங்களே இல்லாத இடங்களில் கூட சங்க நடவடிக்கைகள் இருந்தன. தொழிற்சங்கங்களில் இணை வதற்கு ஆதரவாக ஜோஸ், ஆப்பிள் மற்றும் சிப்போட்டில் ஆகிய வர்த்தக நிறு வனங்களில் பணியாற்றும் தொழிலா ளர்கள் வாக்களித்தார்கள். ஸ்டெடன் தீவில் உள்ள அமேசான் கிடங்கில் நடந்த தேர்தலில் தொழிற்சங்கம் வேண்டும் என்று வாக்களித்ததால் நிர்வாகம் மிரண்டு போனது. அதற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். மிகப் பிரபல கல்வி நிறுவனமான மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கெய்சர் சுகாதார நல நிறுவனம், அல்டியம் செல்ஸ் வாகனத் தொழிற்சாலை மற்றும் பெரு நிறுவனமான ஜெனரல் மோட்டார்சுக்கு சொந்தமான ஆலை என்று தொழிற்சங்கங்கள் செயல்பாடு கள் தொடங்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டில் இந்த ஒற்றுமை தொடரும்  என்றும், தொடராது என்றும் இருவகை யான கருத்துகள் வெளியாகியுள்ளன. நெருக்கடி தொடர்வதால் மேலும் தொழிற் சங்க நடவடிக்கைகள் அதிகரிக்கவே செய்யும் என்றும் தொழிற்சங்க நிர்வாகி கள் கருதுகிறார்கள்.

எதிர்ப் பிரச்சாரம்

தொழிற்சங்கங்களுக்கும், தொழிலா ளர்களுக்குமான நேரடி உறவை சீர் குலைக்க நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றன. தொழிற்சங்கம் வேண்டாம் என்று சொன்னால் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில சலுகைகளை அளிப்பதாக நிறுவனங்கள் வாக்குறுதி களை அளிக்கின்றன. மேலாளர்க ளின் நியமனம் அதிகரித்துள்ளது. சில இடங்களில் சம்பந்தமில்லாத காரணங்களைக் கூறி தொழிற்சங்கத்தி ற்கு ஆதரவான தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கை களும் நடந்துள்ளன.

தடைகள்

தொழிற்சங்கங்கள் தங்கள் சங்க உரிமைகளுக்காக வெற்றி பெற்ற இடங்களிலும், கூட்டுப் பேர உரிமையைப் பெறவே போராடுகிறார்கள். இன்னும் அங்கெல்லாம் உடன்பாட்டை எட்ட முடியவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதில் நிறுவனங்கள் முனைந்து நிற்கின்றன. ஸ்டார்பக்ஸ் மற்றும் அமேசான் உள்ளிட்ட பல பெரு  நிறுவனங்களில் நேர்மையற்ற பல நடை முறைகளை வைத்து தொழிலாளர் களை கசக்கிப் பிழிந்த சம்பவங்களை தொழிற்சங்கங்கள் அம்பலப்படுத்தி யுள்ளன. 

வெற்றிகள்

தொழிற்சங்கத்தில் இணைந்து அதன் மூலம் தங்கள் உரிமைகளைத் தொழிலாளர்கள் வென்ற சம்பவங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. கடந்த ஆண்டு அமெரிக்காவில் மொத்தமாக 5.1 விழுக்காடு அளவுக்கு ஊதிய உயர்வு  இருந்ததற்கு தொழிற்சங்க நடவடிக்கை கள் அதிகரித்ததே காரணமாகும். குறை வான ஊதியம் கிடைத்து வந்த பலருக்கும் வேகமாக ஊதியம் உயர்ந்துள்ளது. ஆனால், விலைவாசி உயர்வு இந்த ஊதிய உயர்வுகளை பலனில்லாமல் செய்து வருகிறது. இதனால் தொழிற்சங்க நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களால் கூட, அமெ ரிக்கத் தொழிலாளர்களில் 10 விழுக்காட் டினர்தான் தொழிற்சங்கங்களில் இணைந்துள்ளனர். அமெரிக்க மக்கள் மத்தியில் காலப் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், தொழிற் சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு 68 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்திருக் கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.