world

img

எம்ஜிஎம் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கிய அமேசான்  

உலகின் பிரபல ஸ்டூடியோஸ் நிறுவனமான எம்ஜிஎம் நிறுவனத்தை ரூ.64 ஆயிரம் கோடிக்கு அமேசான் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.  

1924 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட எம்ஜிஎம்(மெட்ரோ கோல்ட்வின் மேயர்) ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள், டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்களை தயாரித்துள்ளது.  

இந்நிலையில் அமேசான் இன்று வெளியிட்டுள்ள பதிவில், எம்ஜிஎம் ஸிடூடியோஸ் நிறுவனத்தை 8.5 டாலருக்கு, இந்திய மதிப்பில் 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.  

மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை அமேசானுக்கு வரவேற்கிறோம். யாரையும் பணி நீக்கம் செய்யப்போவதில்லை என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

;