world

img

ஹைதியில் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 75 பேர் பலி!

ஹைதி நாட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 75 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஹைதியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி எதிர்ப்பராத விதமாக விபத்தில் சிக்கியது. அப்போது லாரியில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பிடிக்க ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது  திடீரென தீப்பிடித்து டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த 20 வீடுகளும் தீ பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்த விபத்து தேசிய பேரழிவு என்று அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி தெரிவித்துள்ளார். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார்.

;