வெனிசுலாவின் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் ஆளுநர்களுக்கான தேர்தலில் ஆளும் வெனிசுலா சோசலிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் பெற்றி பெற்றுள்ளது.
54 அரசியல் கட்சிகள் பங்கேற்ற இந்தத் தேர்தலில், அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. நிறைவு பெற்றவுடன் 295 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் ஆளும் கூட்டணிக்குக் கிடைக்கும் என்பது தெரிய வரும். கிட்டத்தட்ட 85 விழுக்காடு இடங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர்களுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 24 இடங்களில் 23 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியுள்ளது.