world

img

பெருவில் பயங்கர காட்டுத்தீ -15 பேர் பலி

பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரு நாட்டில் உள்ள அமேசான் வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும், இந்த காட்டுத்தீயில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக பெரு அரசு தெரிவித்துள்ளது. அமேசான் காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த 128 பேர் சிகிச்சைக்குபின் வீடுதிரும்பியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.