பெரு நாட்டின் சுல்லானா நகருக்குக் கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 33.18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
எனினும், சிறிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன எனக் கூறப்படுகிறது. நிலநடுக்க அதிர்வால் பெரு நாட்டு மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.