டோக்கியோ, செப்.12- ஜப்பானின் கோச்சி மாகாணத்தில் உள்ள காமி நகரவைக்கான தேர்தலில் ஜப்பான் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர் களும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி க்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்க வில்லை. சில எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அமைக்கப்பட்ட கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், தேர்தல் வாக்குகளில் அது பிரதிபலிக்கவில்லை. மீண்டும் தாராள வாத ஜனநாயகக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியான கொமேய் கட்சியும் மீண்டும் வெற்றி பெற்று அதிகாரத்தில் அமர்ந்துவிட்டன. அந்தத் தேர்தலுக்குப் பிறகு, நடைபெற்று வரும் மாகாணத் தேர்தல்களில் தொடர்ந்து கம்யூ னிஸ்ட் கட்சி இழந்த பலத்தை மீட்டு வருகிறது. காமி நகரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதர வாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ள னர்.
மொத்தமுள்ள 15 இடங்களில் 5 இடங்களில் போட்டியிட்ட கட்சிக்கு, அனைத்து இடங்களி லும் வெற்றி கிடைத்துள்ளது. மேலும், கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவோடு போட்டியிட்ட மற்றொருவரும் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நகரவையில் இதற்கு முன்பு இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ரயில் நிலையங்களில் புதிய வசதிகள், படித்து முடிக்கும் வரையில் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சேவை, தங்கள் நகரவைக்குட்பட்ட கல்வி மாவட்டங்களில் பள்ளிநேரம் நிறைவு பெற்ற பிறகு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் மையங்கள் உள்ளிட்டவற்றை உரு வாக்குவதில் பெரும் பங்காற்றினர். மக்களுட னான தொடர்பு எப்போதும் இருக்கும் வகை யில் இயக்கங்களைக் கட்டி வருகிறார்கள்.
மேயர் தேர்தலில் வெற்றி
கடானோ நகர மேயர் தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பா ளர் யமாமோடோ கெய் வெற்றி பெற்றுள்ளார். இந்த நகரில் தொடர்ந்து தாராளவாத ஜனநாய கக் கட்சி மற்றும் கொமேய் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே இதுவரை வெற்றி பெற்று வந்தனர். தண்ணீருக்காக ஏற்றப்பட்ட 13 விழுக்காடு அதிகக் கட்டணத்தை ரத்து செய் வேன் என்று யமாமோடோ அறிவித்துள்ளார்.