world

img

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் : 62 முறை லெபனானில் தாக்குதல் நடத்தி அட்டூழியம்

பெய்ரூட், டிச.2- இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹிஸ் புல்லாவுக்கு இடையே 2 மாதங்க ளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது இஸ்ரேல் ராணுவம் இந்த ஒப்பந்தத்தை மீறி சுமார் 62 முறை லெபனானில் தாக்கு தல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு இடையே நவம்பர் 27 அன்று இரண்டு மாதங்களுக்கான  போர் நிறுத்த ஒப்பந்தம் கையெ ழுத்தானது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தமாக மாறும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்திருந்தது.

இந்த போர் நிறுத்தம் குறித்து பேசிய ஈரான் வெளி யுறவுத்துறை அமைச்சர்  அப்பாஸ் அராச்சி இஸ்ரேலின் நடவடிக்கையை பொறுத்தே அமைதி திரும்பும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்ட புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் இஸ்ரேல் ராணுவம் 38 முறையும், சனிக் கிழமையன்று மட்டும் 24 முறையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்கு தல் நடத்தியுள்ளது.

 இவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான பிறகு சுமார் 62 முறை இஸ்ரேல் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி யுள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்கு தலில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த ஒரு ஆண்டாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குத லில்   3,960 க்கும் அதிகமான மக்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.  16,500 க்கும் அதிகமானோர் படுகாயமடைந் துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போர் நிறுத்த காலத்தில் இருதரப்பி னரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுவதை பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மேற்பார்வையிட்டு வரும் என கூறப்பட்டிருந்த நிலையில் இஸ்ரே லின் ஒப்பந்த மீறலை எந்த நாடும் கண்டிக்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.C