world

img

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  

இந்தோனேசியாவில் இன்று ரிக்டர் 6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் 6 அளவில் பதிவாகி இருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கே 259 கி.மீ. மையப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 174.3 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  

இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.