பேடிஎம் பணப் பரிவர்த்தனை வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பணப்பரிவர்த்தனை விதியை முறையாக பின்பற்றாத காரணத்தினால் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என பேடிஎம் வங்கிக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பேடிஎம் வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நிபுணரை நியமிக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதனைதொடர்ந்து பேடிஎம் பண பரிவர்த்தனை வங்கி, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டுமென்றால், தகவல் தொழில்நுட்ப பிரிவின் தணிக்கை ஆய்விற்குப் பின் புதிய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி பெற்று சேர்க்கவேண்டும்.
கண்காணிப்பு பிரச்சனை காரணமாக பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.