‘தாட் ஏவுகணை அமைப்பு மீது முழு நம்பிக்கை வைக்காதீர்கள்’
அமெரிக்க ராணுவம் இஸ்ரேலுக்கு கொடுத்துள்ள தாட் ஏவுகணை தடுப்பு அமைப்பு மீது முழு நம்பிக்கை வைக்காதீர்கள் என இஸ்லாமிய புரட் சிக் காவலர் படை யின் (IRGC) தலை மைத் தளபதி எச்ச ரித்துள்ளார். ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது 70-80 சதவீதஏவுகணை கள் இஸ்ரேலின் அயர்ன் ட்ரோம்ஏவு கணை தடுப்பு அமைப் பை தாண்டி தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக் கா தாட் ஏவுகணை தடுப்பு அமைப்பை இஸ்ரேலில் நிலை நிறுத்தியுள்ள நிலையில் ஈரான் எச்சரித்துள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் கொலை மிரட்டல்
காசாவில் இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளை படுகொலை செய்யும் வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக 6 அல்-ஜசீரா பத்திரிகையாளர்களை கொலைசெய்யப் போவதாக இஸ் ரேல் அதிகாரப்பூர்வ மாக அச்சுறுத்தியுள் ளது.ஹமாஸ் உடன் தொடர்புடையவர் கள் என இஸ்ரேல் வழக்கமாக சொ ல்லி வரும் பொய் யையே தற்போதும் கூறியுள்ளது. லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் இது வரை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் ஜெர்மனி
ஜெர்மனி இஸ்ரேலுக்கு 856 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயு தங்களின் அளவா கும். இது ஒரு வாரத் திற்கு முன்பு அர சாங்கம் அறிவித்த தை விட இரண்டு மடங்கு அதிகமா கும். இதற்கு முன்பாக இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்ய ஜெர்மன் அரசு தடுத்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த புதிய தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் துருக்கி
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள துருக்கி விரும்புவதாக அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த 16 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா ஜனாதிபதி புடினு டன் எர்டோகன் இரு தரப்பு பேச்சுவார்த் தையும் நடத்தியுள் ளார். மாநாட்டின் முடிவில் துருக்கி பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டாளியாக (முழு உறுப்பினர் அல்ல) தேர்வாகியுள்ளது. நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உள்ள துருக்கி ரஷ்யாவுடன் இணை வது ஆரோக்கியமான முடிவு என தெரிவித்துள்ளனர்.