world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்...

ராமர் பெயரில் வசூல் செய்து குடித்துக் கூத்தடிக்கிறார்கள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகிறோம் என்ற பெயரில், ஆர்எஸ்எஸ்,விஸ்வ ஹிந்து பரிஷத்உள்ளிட்ட அமைப்புக்கள் தீவிர நன்கொடை வசூலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயில் கட்டுகிறோம் என்ற பெயரில் பாஜகதலைவர்கள் கோடிக்கணக்கில் பணம் வசூலிப்பதாகவும், அந்தப் பணத்தை வைத்து,இரவில் குடித்துவிட்டு ஊதாரி வேலைகளில் ஈடுபடுவதாகவும், ம.பி. மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கண்டிலால் புரியா குற்றம் சாட்டியுள்ளார்.

                                      *********************

உள்ளாட்சிக்கு போட்டியிடும் மோடியின் அண்ணன் மகள்!

குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21 அன்று 6 மாநகராட்சிகளுக்கும், 28 அன்று நகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கும் தேர் தல் நடைபெறுகிறது. இந் நிலையில், அகமதாபாத் மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தலில், பிரதமர் மோடியின் சகோ
தரரான பிரகலாத் மோடி-யின் மகள் சோனால்மோடி, இங்குள்ள போதக்தேவ் வார்டில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

                                      *********************

திரிணாமுல் காங்கிரசுக்கு பாஜக அளித்த ஆறுதல்!

மேற்குவங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரசிலிருந்து இதுவரை 16 எம்எல்ஏ-க்களும், ஒருஎம்.பி.யும் பாஜக-வுக்கு ஓட்டம் பிடித்துள்ள நிலையில், பாஜக திடீர் அறிவிப்புஒன்றை வெளியிட்டுள் ளது. அதாவது, “இனிவரும் நாட்களில் திரிணாமுல் கட்சியிலிருந்து கூட்டங்கூட்டமாகயாரையும் சேர்க்க மாட்டோம். வருவோர் கிரிமினல் பேர்வழிகளா? என்பதை விசாரித்துத்தான் சேர்ப்போம்” என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

                                      *********************

குடியரசு தினப் போராட்டம்: இதுவரை 122 பேர் கைது?

ஜனவரி 26 அன்றுநடந்த தில்லி சம்பவங்கள்தொடர்பாக, இதுவரை 122 பேரை கைது செய் துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி காவல்துறை கூறியுள்ளது. இவர்களில் பஞ்சாப் மாநிலத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருக்கும் 80 வயது விவசாயி குர்முக் சிங்கும் ஒருவர் ஆவார். இவர் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                      *********************

பட்ஜெட்டைப் பாராட்டி டுவிட்டரில் வறுபட்ட அம்ருதா

மத்திய அரசின் பட்ஜெட்டை, 100 ஆண்டுகளில் இல்லாத சிறப்பான பட்ஜெட் என்று கூறிய- மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, சமூக வலைத்தளவாசிகளின் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். “இந்தியா சுதந்திரம் பெற்றே 74 ஆண்டுதான் ஆகிறது; அப்புறம்எப்படி 100 ஆண்டு?” என்றும், “ஒருவேளை அம்ருதா இந்தியர் இல்லையோ?” என்றும்டுவிட்டர்வாசிகள் கிண்டல் அடித்துள்ளனர். அம்ருதா அவ்வப்போது பாடல்களை வெளியிடுபவர் என்ற வகையில், “வாருங்கள் பட்ஜெட்டை பாராட்டி ஒரு பாட்டுப் பாடலாம்”என்று டுவிட்டர்வாசி ஒருவர் நோகடித்துள் ளார்.