world

img

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் பதவியேற்பு

இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் III  இன்று பதவியேற்றார். 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அவரின் மறைவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராணி எலிசபெத்தின் மறைவையடுத்து அவரது மகனான 73 வயது சார்லஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ், இங்கிலாந்து மன்னராகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் இன்று பதவியேற்றார். லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.