world

img

எமிரெட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்துச் செல்ல அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

லெபனானில் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் போன்ற மின்னணு சாதனங்கள் வழியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய் வழியாக செல்லும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது என துபாயைச் சேர்ந்த விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.