இலங்கை பொருளாதாரம் மீண்டெழ இந்தியா உதவும் என்று அந்நாட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க-விடம் இந்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
ஒரு நாள் பயணமாக கொழும்பு சென்ற அவர், வெள்ளிக்கிழமை (அக்.4) அந் நாட்டின் புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க-வை சந்தித்துப்பேசினார். தீவு நாடான இலங்கை யின் பொருளாதாரம் மீண்டெழவும் வளர்ச்சி பெறவும் இந்தியா அனைத்து உதவிகளை யும் செய்யும் என்று அப்போது ஜெய்சங்கர் உறுதியளித்தார். இந்தியாவின் மிக அருகில் உள்ள அண்டை நாடாக இலங்கை இருப்ப தால் இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு தொடர்பாகவும் இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் படுவது தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு அமைச்சர் கொண்டு சென்றதாக சந்திப்புக்கு பின்னர் இரு தரப்பிலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கு வருகை தருமாறு இலங்கை ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திரமோடி சார்பாக ஜெய்சங்கர் முறைப்படி அழைப்பு விடுத்தார். இலங்கை அதி பரும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவ டைந்து அந்நாட்டு மக்கள் முதல்முறையாக இடதுசாரி கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதி பதியாக தேர்வுசெய்த பின்னர் கடந்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் இருந்து முக்கிய தலைவர் ஒருவர் இலங்கை சென்றது முக்கி யத்துவம் வாய்ந்ததாகும். காரணம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்நாட்டிற்கு சென்றுள்ள முதலாவது உயர் நிலைக்குழு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தலைமையிலான குழுவாகும்.
முழு ஆதரவு
பொருளாதார தேக்க நிலையில் இருந்து இலங்கை பொருளாதாரம் புத்துயிர் பெறும் வகையில் சுற்றுலா, முதலீடு, மின்சாரம், எரிசக்தி சேவை மற்றும் பால் பண்ணை ஆகியவற்றில் இந்தியா உதவும் என்று இந்த பயணத்தின் போது இந்தியா சார்பில் ஜெய்சங்கர் அந் நாட்டு ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் உதவியை அளித்ததற்காக அனுர குமார திஸா நாயக்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையில் எரிசக்தி உற்பத்தி, எரிபொ ருள் மற்றும் திரவ எரிவாயு உற்பத்தி, ஆன்மீக தலங்களில் வழக்கமான எரிசக்திக்கு பதில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துதல், போக்குவரத்து இணைப்பு, பொது கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குதல்,சுகாதாரம் மற்றும் பால் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா இலங்கை க்கு உதவி செய்து வருவதை இலங்கை ஜனாதிபதியிடம் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டி னார். பொருளாதார ரீதியாக இலங்கை நீடித்த வளர்ச்சியை எட்டவும் புதிய வருவாயை கண்ட றியவும் இந்தியா தொடர்ந்து ஆதரவும் உதவியும் அளிக்கும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
அதானி விவகாரம் பேசப்படவில்லை
அதே நேரத்தில் இலங்கையின் வடக்கு மாகா ணத்தில் கடந்த ஆட்சிக்காலத்தின் போது அனுமதி அளிக்கப்பட்ட சர்ச்சைக்குறிய அதானி மின் திட்டம் தொடர்பாக இருதரப்பிலும் எதும் பேசப்படவில்லை. இந்த திட்டத்திற்கு உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கை ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பு இந்த திட்டத்திற்கு அனுர குமார திஸாநாயக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். டெண்டர் நடை முறைக்கு அப்பால் இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அதானி நிறுவனத்து டன் இலங்கை அரசு செய்துகொண்ட மின் கொள் முதல் ஒப்பந்தம் இலங்கைக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இலங்கையில் எரிசக்தி உற்பத்திக்கு ஆகும் செலவு குறைவு என்பதால் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ள தாகவும் அதன் மூலம் இலங்கைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் திஸாநாயக்க தெரிவித்ததாக புதுதில்லியில் வெளியான வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை க்கு சுற்றுலா பெரும் வருவாயை ஈட்டித்தரும் துறை என்பதால் அந்த துறையில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் ஜெய்சங்கரும் அனுர குமார திஸாநாயக்கவும் விவாதித்தனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு தொடர்பாகவும் இலங்கை அதிபருடன் ஜெய்சங்கர் விவாதித்தார். இந்தியாவின் கவலையை இலங்கை உணர்ந்துள்ளதாகவும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறை யாண்மைக்கு எதிரான எந்த ஒரு செயலும் இலங்கை மண்ணில் அனுமதிக்கமுடியாது என்று இந்தியாவுடன் இலங்கை உறுதிய ளித்ததாக அந்நாட்டின் உயர்மட்ட தலை வர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் தமிழர்களின் விருப்பங்களை யும் தேவைகளையும் புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூக மக்களும் அமைதியாகவும், சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கும் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் இந்தியா அனைத்து வகையிலும் ஆதரவாக இருக்கும் என்றும் இலங்கை தலைவர்களிடம் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
இலங்கை தமிழர்கள் அதிக அதிகாரம் பெற வகைசெய்யும் அந் நாட்டு அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் மாகாண கவுன்சில்களுக்கு விரைந்து தேர்தல் நடத்தவேண்டும் என்று இந்தியாவின் விருப்பத்தையும் அவர் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மீன்வளம், தேசிய ஒற்றுமையை மேம்படுத் துதல் ஆகியவற்றில் பரஸ்பர நலன்கள் தொடர்பாகவும் தமிழர் பிரச்சனைக்கு புதிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசி யல் ரீதியாக தீர்வு காணப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போவதாகவும் ஜெய்சங்கரிடம் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரி வித்தார்.
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இந்தியா வின் கவலையை இலங்கை அரசிடம் ஜெய் சங்கர் எடுத்துரைத்தார். இலங்கை சிறை பிடித்துள்ள இந்திய மீனவர்கள் மற்றும் அவர்க ளது படகுகளை விரைந்து விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, ஐக்கியதேசிய கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரையும் சந்தித்துப்பேசினார்.
50 மீனவர்கள் விடுதலை
இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 50பேர் வெள்ளிக் கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டி னம், மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இவர்கள் இந்தவாரம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என்று இலங்கைக்கான இந்திய தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.