world

img

10 ஆண்டுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்த சீனா

பெய்ஜிங்,டிச.4- கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் சீன அரசு சுமார் 10.7 லட்சம் மருத்து வர்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இம்மருத்துவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், பொது மருத்துவ சிகிச்சை பயிற்சி, குழந்தைகள் சிறப்பு மருத்துவர், மனநல மருத்துவம் உள்ளிட்ட அதிகமாக தேவை உள்ள துறை களில் நிபுணத்துவம் பெற்றுள்ள னர் என்று சீன சுகாதார அதிகாரி  தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார ஆணை யத்தின் (NHC) துணை அமைச்சர் ஸிங் இக்ஸின் சீனாவின்  மருத்து வக் கல்வி மன்றம் சமீபத்தில் வெளி யிட்ட புள்ளி விவரங்களை வெளி யிட்டு, மருத்துவத்துறையில் அர சாங்கம் மேற்கொண்டுள்ள வளர்ச்சிக்கான பணிகள் குறித்து பேசியுள்ளார். அதில் உள்நாட்டு மருத்துவர் பயிற்சியின் எண்ணிக் கையை அந்நாடு படிப்படியாக அதிகரித்திருப்பது பற்றி குறிப் பிட்டுள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் சுகாதாரத் துறைகளில் குறிப் பிட்ட மருத்துவத் துறையில் நிபு ணத்துவம் பெற்ற மருத்துவர்க ளின் பற்றாக்குறை பெருமளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ள தாகவும், அதே போல இந்த வளர்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையிலான மருத்துவ சேவை தரங்களில் உள்ள வேறுபாடுகள் குறைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு மருத்துவர் கள், மருத்துவ துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையிலான பயிற்சியை  உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை சீன அரசு வெளி யிட்டிருந்தது. பிறகு 2014 முதல் அந்த வழிகாட்டுதல்களை நாடு முழுவ தும் அமல்படுத்தத் துவங்கியது. அதாவது மருத்துவப் பயிற்சி யை பிராந்திய வாரியாக இல்லா மல் ஒருமுகப்படுத்தப்பட்ட நிலை யில் இருந்து சமமான தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பயிற்சியை கொடுத்து நாடு முழுவதும் மருத்துவர்களின் தரத்தையும் சுகாதாரத்துறையையும் முன் னேற்றியுள்ளது.