world

img

இந்தியாவுக்கு அரிய தாதுக்கள், உள்ளிட்டவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல்!

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள், உள்நாட்டு தேவைகள் அதிகரித்தல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக இவ்வகை பொருட்களின் ஏற்றுமதியை சீனா தற்காலிகமாக கட்டுப்படுத்தி வந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் விவசாயம், சுரங்கத் துறை மற்றும் தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, உரங்கள், அரிய தாதுக்கள், துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பொருட்களை இந்தியாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவின் இந்த முடிவு, இந்தியாவின் விவசாயம், ஆற்றல், சுரங்கத் துறை மற்றும் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவாக அமையும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.