வங்கதேசத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டாக்காவில் இருந்து தெற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் வங்கதேசத்தின் ஜலோகாட்டி மாவட்டத்தில் உள்ள ஆற்றின் வழியாக, இன்று அதிகாலையில் எம்வி அபிஜான் 10 என கூறப்படும் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து படகு நடு ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டும் தீயை அணைக்க முடியாததால் தீ படகு முழுவதும் பரவ தொடங்கியது.
இந்த தீ விபத்தில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலர் தீயில் இருந்து தப்பிக்க முயன்றதால் ஆற்றில் குதித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் ஜகாகாதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.