வாஷிங்டன், நவ. 6 -
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரும் மிகப் பெரிய தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
நவம்பர் 5 அன்று வாக்குப்பதிவு முடியும் வரை, யாருக்கு வெற்றி கிட்டும் என்ற நிலை தெரியாத வகை யில், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப்க்கு இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், நவம்பர் 6 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை யின் போது ஆரம்பம் முதலே, கமலா ஹாரிஸை விட டிரம்ப் முன்னிலை பெறத் துவங்கினார்.
அமெரிக்காவின் எலக்டோரல் காலேஜ் தேர்தல் முறையில், வெற்றி பெறுவதற்கு 270 எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் தொகுதியின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். இதில் டிரம்ப் 277 எலக்டோரல் காலேஜ் ஆதரவைப் பெற்றார். கமலா ஹாரிஸ் 224 எலக்டோரல் காலேஜ் ஆதரவு களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இதன்மூலம் 47-ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்வாகியுள்ளார். துணை ஜனாதி பதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் கணவரான ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்வாகி உள்ளார்.
எலக்டோரல் காலேஜ் முறை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் தொகுதி) என்ற தனித்துவமான நடைமுறை பின் பற்றப்படுகிறது. இந்த முறையின்படி மக்களின் நேரடி வாக்குகள் அல்லது விருப்பத்தின் அடிப்ப டையில் ஜனாதிபதி தேர்வாக மாட்டார். மாறாக அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற் கும் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையி லான எலக்டோரல் வாக்குகள் மூலமாகவே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட் பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற் றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங் கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் தொகுதி உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் 1 முதல் கலிபோர்னியா போன்ற பெரிய மாகாணங்களில் 55 வரை வாக் காளர்கள் தொகுதி உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 50 மாகாணங்களிலும் 538 வாக் காளர்கள் தொகுதி உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் அதிகபட்ச வாக்காளர் தொகுதி களின் ஆதரவைப் பெற்று டிரம்ப் வெற்றி பெற் றுள்ளார். அத்துடன், 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் டிரம்ப், இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
டிரம்ப் வெற்றிக் களிப்பு
தனது வெற்றிக்குப் பிறகு புளோரிடா மாகாண ஆதரவாளர்கள் மத்தியில் உரை யாற்றிய டிரம்ப், தனது வெற்றி அமெரிக்கா வின் பொற்காலம் எனவும் அவரது கட்சிப் பணி மற்றும் செயல்பாடுகள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ளச் செய்யும் எனவும் கூறினார். மேலும் துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கும் வாழ்த்துக்க ளைத் தெரிவித்தார்.
உலக தலைவர்கள் வாழ்த்து
இந்த வெற்றியை தொடர்ந்து உலகம் முழுவ தும் டிரம்ப்பிற்கு தலைவர்கள் வாழ்த்து தெரி வித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா வின் கூட்டாளி நாடுகளின் தலைவர்கள் - உக் ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இத்தாலி பிரதமர் மெலோனி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி, நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமது ‘எக்ஸ் ‘பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு எனது நண்பர் டொனால்டு டிரம்புக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள். உங்களது முந்தைய சிறப்பான பதவிக்காலத்தை மீண்டும் நடத்தும் போது இந்தியா - அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய ஒத்துழைப்பை மேலும் வலுப் படுத்துவதை நான் எதிர்பார்க்கிறேன். நமது மக்க ளின் முன்னேற்றத்துக்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகிய வற்றை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளால் அமெரிக்காவின்
கொள்கையில் மாற்றம் இருக்காது!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கருத்து
“அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மூலம், அந்நாட்டின் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பிற்காக சென்றுள்ள எஸ். ஜெய்சங்கர், அங்கு பேசுகையில் “அமெரிக்க கொள்கையின் நீண்டகால போக்கு என்று நான் கூறிவரும் விஷயத்தை அங்கு நடைபெற்று வரும் தேர்தல் மாற்றியமைக்கும் என்று நான் நம்பவில்லை” என்று கூறியுள்ளார். “அமெரிக்கா அதன் சர்வதேசக் கடமைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது. வெளிநாடுகளில் தனது துருப்புக்களை (ராணுவம்) நிலைநிறுத்துவதில் தயக்கம் காட்டுகிறது. அநேகமாக, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக் காலத்திலிருந்தே இந்த மாற்றம் தொடங்கிவிட்டது” என்றும், “உதாரணமாக, ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெற்றார்” என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ள ஜெய்சங்கர், “தற்போது ஜனாதிபதி டிரம்ப் இந்த விஷயத்தில் இன்னும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், “அமெரிக்காவின் முந்தைய ஆதிக்கம் மற்றும் தாராளவாத மனப்பான்மை இனியும் தொடராத ஓர் உலகத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.