world

img

ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் சர்வதேச அணுசக்தி முகமை உடனான புதிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் : ஈரான் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் சர்வதேச அணுசக்தி முகமை உடனான புதிய ஒப்பந்தங்கள்  ரத்து செய்யப்படும் : ஈரான் எச்சரிக்கை


கெய்ரோ,செப்.15- ஈரான் மீது ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தடைகள் விதித்தால் சர்வதேச அணுசக்தி முகமையுடன் மேற்கொண்ட புதிய ஒப் பந்தங்கள் ரத்து செய்யப் படும் என ஈரான் வெளியுற வுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அப்போது சர்வதேச அணு சக்தி முகமையானது அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் தாக்குதலை நியாயப் படுத்தும் விதமாக பேசிய தாக அதனுடன் கொண்டி ருந்த உறவுகளை நாட்டின் நாடாளுமன்ற ஒப்புதலுடன் ஈரான் துண்டித்தது.  இதன் பிறகு இந்நிலை யில் தான் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் குறைந்த பட்ச ஒத்து ழைப்பை தரும் வகையில் சர்வதேச அணுசக்தி முகமை யுடன் ஈரான் கையெழுத் திட்டது. இதற்கிடையே ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய   ஐரோப்பிய நாடுகள் (E3), ஈரானுக்கு எதிராக மீண்டும் சர்வதேசத் தடை களை அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அண்மையில் கடிதம் எழுதின.  மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் ஈரா னின் மீது குற்றச்சாட்டுக் களை முன்வைத்து வரு கின்றன. இந்நிலையில் தான் அரசியல் உள்நோக்கத்து டன் ஈரானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டால் ஈரான் இந்த ஒப்பந் தத்திலிருந்து விலகும். விரோதத்துடன் எந்த நாடு ஈரானுக்கு அழுத்தம் கொடுத் தாலும், அது சர்வதேச அணுசக்தி முகமையுடனான இந்த  ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு வழிவகுக்கும் என்று அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.