world

img

வெனிசுலாவில் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

லாஸ் தெஜேரியஸ், அக்.11 வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெனிசுலாவில் கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

குறிப்பாக அரகுவா மாகாணத்தின் லாஸ் தெஜேரியஸ் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 56 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீட்பு பணியை நேரில் பார்வையிட்ட வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

;