லண்டன், செப்.25- இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கறுப்பி னத்தவரை சுட்டுக் கொன்றதால் காவல் துறை அதிகாரி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தற்போது அதிகாரிகள் ஆயுதமேந்திய ரோந்துப் பணியை நடத்த மறுப்பதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. 2022 செப்டம்பர் மாதம் கிறிஸ் என்ற கறுப்பினத்தவரின் வாகனத்தை பின்தொ டர்ந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் வாக னத்தை மறித்து சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த இனவெறி கொலைக்கு பின் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பல அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய பணிகளில் இருந்து விலகுவதற்கான முடிவை எடுத்துள்ள னர் என்றும், 10 நபர்களில் ஒருவர் மட்டுமே துப்பாக்கி எடுத்து ரோந்து செல்வதாகவும் அவர்களும் சிறப்புப் பயிற்சி பெரும் அதிகாரி கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஒரு காவல் அதிகாரி, 33 வயது மதிக்கத்தக்க சாரா எவரார்ட் என்ற பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நடை பெற்றது. அதே ஆண்டு ஜனவரி மாதம் 2003 முதல் 2020 வரை பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக லண்டன் நாடாளுமன்றம் மற்றும் பாதுகாப்புத் துறை யில் பணியாற்றிய ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார்.இது போன்ற குற்றங்க ளுக்காக கடந்தாண்டு மட்டும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள் ளதாக லண்டன் காவல்துறை தெரி வித்துள்ளது. மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு இனவெறி, பெண்களின் மீதான வெறுப்பு வன்முறை உள்ளிட்டவை காரண மாக லண்டன் காவல்துறை பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறியது.