- ஐரோப்பிய ஒன்றியம் தேவையான உதவிகளை செய்வது இல்லை எனவும் தனது அரசு ஊழி யர்களுக்கு ஊதியம் தர இந்த உதவி தேவை எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புலம்பியுள்ளார்.
- போர் காரணமாக அரசு ஊழி யர்களுக்கு ஊதியம் கூட தர இயலாத நிலையில் உக்ரைன் உள்ளது. ஆனாலும் அமெரிக்காவுக் காக போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
- ரஷ்யா மீது மேற்கத்திய தேசங்கள் பல தடை களை போட்டிருந்தாலும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ரஷ்யா சென்று புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
- ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின்றன. அமெரிக்காவின் நாட்டாமை எல்லா நேரங்களிலும் எடுபடுவது இல்லை! ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக பிரிட்டனில் மின் கட்டணம் செங்குத்தாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களி டம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்ட வேண்டாம் என புதிய பிரச்சாரம் தொடங்கியுள்ளது.
- சுமார் 75,000 பேர் மின் கட்டணம் கட்டுவதில்லை என முடிவெ டுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது பொறுப்பற்ற செயல் என பிரிட்டன் அரசாங்கம் கண்டித்துள்ளது. அமெரிக்காவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதால் ஏற்படும் விளைவு கள் இது என்பதை எப்பொழுது பிரிட்டன் உணரும்?
- உணவு நெருக்கடிக்கு ரஷ்யாவை காரணமாக்கு வது முட்டாள்தனமான செயல் என அமெரிக்கா வை ரஷ்ய தூதர் அனடோலி அண்டோனவ் கண்டித்துள்ளார். உக்ரைன் நெருக்கடிக்கும் அதன் பின் விளைவுகளுக்கும் தான் காரணம் என்பதை மறைக்க அமெரிக்கா,
- ரஷ்யா மீது பழி போடுகிறது. அமெரிக்க மக்களே கூட இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ஒரு பில்லியன் டாலர் ஆயுதங்கள் கொடுக்கிறது.போரை முடி வுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்பவில்லை என்பது தெளிவு.
- ரஷ்யா மீட்டுள்ள சப்போராசியே பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது 20 சிறிய ஏவுகணை தாக்குதலை உக்ரைன் நடத்தி யுள்ளது. இதன் ஆபத்தை உக்ரைன் உணர்ந்துள் ளதா? அல்லது இந்த தாக்குதலை நடத்தி பழியை ரஷ்யா மீது போடும் உத்தியா? என்பது தெரியவில்லை.