world

img

கடந்த 24 மணி நேரத்தில் 10,253 பேருக்கு கொரோனா - ரஷ்யா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,253 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக முழுவதும் கொரோனா தொற்று 2ஆம் அலை வீசி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,253 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 379 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
மேலும் மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,33,029 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89,473 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

;