world

img

மெக்சிகோ: இடதுசாரி கட்சி வெற்றி:முதல் பெண் ஜனாதிபதி ஆகிறார் ஷின்பாம்

மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷின்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜூன் 2 அன்று ஜனாதிபதி, 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷின்பாம் போட்டியிட்டார்.

தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவிகித வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக புள்ளிவிவர மாதிரி ஒன்றை அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய பிரதமர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வழியில் கிளாடியாவின் ஆட்சிக்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாடியா ஷின்பாம் வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தெரிகிறது. மெக்சிகோ நகர மேயராகவும் அவர் பணியாற்றியுள்ளார். காலநிலை விஞ்ஞானி. மெக்சிகோ தேச அரசியலிலும் அனுபவம் கொண்டவர்.