world

img

சீனாவுடன் இணைந்து பொருளாதார முன்னேற்றம் : ஷேபாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்,ஜூன் 5- பாக் - சீன உறவு அசைக்க முடியாத உறவு எனவும், எங்கள் நட்பு மிக நெருக்கமானது, எங்கள் இதயங்கள் ஒன்றாகவே துடிக்கின்றன எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் தெரிவித் துள்ளார்.

பாக் பிரதமர்  ஷேபாஸ் ஜூன் 4- 8 வரை ஐந்து நாட்கள் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். பயணத்திற்கு முன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த பயணத்தின் மூலம் 6000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான  சீனா - பாக் பொருளாதார வழித் தடத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேபாஸ் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கைச் சந்திக்க உள்ளார். 

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக்  கொண்டு  நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாகிஸ்தான் திட்ட மிட்டுள்ளது. இந்த சந்திப்பில் சீனாவுடன் இணைந்து ஒரு கூட்டுப் பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க உள்ளது பாகிஸ்தான். இதனை சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் உறுதி செய்துள்ளார். 

எனவே இந்த சந்திப்பில் சீனா - பாக் பொரு ளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்தான முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நான் 40 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற போது மிகவும் பின்தங்கிய நாடாக இருப்பதை  பார்த்தேன். தற்போது நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்தில் தீவிரமாக வளர்ந்து வரும் அதேவேளை யில் அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைக ளைப் பூர்த்தி செய்வதில் சீனா  அர்ப்பணிப்போடு செயல்படுகிறது என ஷேபாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவுடனான பொருளாதார உறவு களை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ளவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்பு றவை வலுப்படுத்தி பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சி யை கொடுக்கவும் முயற்சி செய்கிறோம் என தெரி வித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு நவீன தாராளமயக் கொள் கைகளாலும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனா லும்  மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது. புதிதாக ஆட்சி அமைத் துள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி, அந்நாட்டு பொருளாதாரத்தை  மீண்டும் வேகப்படுத்தி நாட்டின் நிலையை சரிசெய்ய சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி களை எடுத்து வருகிறது. எனினும் சர்வதேச நாணய நிதியத்திடமும் அந்நாடு தொடர்ந்து கடன் களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

;