டோக்கியோ, டிச.12- ஆளும்கட்சிக்கு ஜப்பானின் பெரு நிறு வனங்கள் வாரி வழங்கும் கட்சி நிதியால் ராணுத்திற்கு ஒதுக்கப்படும் நிதி பெருமளவு அதிகரித்துள்ளது. அண்மையில் ஜப்பானில் நடந்த நாடாளு மன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாய கக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. தாராள மாக பணத்தைச் செலவழித்துதான் இந்த வெற்றி அவர்கள் பெற முடிந்தது. நாட்டின் பெரும்பாலான பெரு நிறுவனங்கள் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதையே விரும்பின. அதனால் தேர்தல் செலவுக்கான நிதியையும் வாரி வழங்கியுள்ளன. மறை முகமாக வழங்கப்படும் நிதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே, நேரடியாக 20 பெருநிறுவனங்கள் வழங்கிய தேர்தல் நிதி மட்டுமே 30 கோடி ரூபாயைத் தாண்டி யிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ராணு வத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்தே வந்துள்ளது.
2021க்கான நிதியாண்டில் மட்டும் ராணுவத்திற்கு 9 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 52 விழுக்காடு அதிகமாகும். தேர்தல் நேரத்திலும், மற்ற காலங்களிலும் ராணுவத் தளவாட ஒப்பந் தங்களை மேற்கொள்ளும் பெரு நிறுவனங் கள் தாராளமாக நிதி வழங்குவதுதான் இதற்குக் காரணமாக இருந்து வருகிறது. நிதியை அதிகமாக வழங்கும் மிட்சு பிஷி நிறுவனத்திற்கு 2020 ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படகுகள், ரோந்து ஹெலி காப்டர்கள் உள்ளிட்ட தளவாடங்களை ராணு வத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கிடைத்தது. அரசு வாங்கும் தளவாடங்களின் மதிப்பில் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 18 விழுக்காடாகும். அதன் துணை நிறுவனம் ஒன்றிற்கு சுமார் 5 விழுக்காடு மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. ராணுவ தளவாடக் கொள்முதல் மற்றும் ஆளும்கட்சிக்குக் கிடைத்துள்ள நிதி ஆகிய வற்றைக் கணக்கில் கொண்டு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான அகஹதா மேற்கொண்ட ஆய்வுகளில்தான் மேற்கண்ட விபரங்கள் கிடைத்துள்ளன.