world

சுவிட்சர்லாந்தில் கம்யூனிஸ்ட் கட்சி 84 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உதயம்

சூரிச், மே 15-      சுவிட்சர்லாந்தில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப் பட்டது. சுவிட்சர்லாந்தின் புரட்சிகர கம்யூ னிஸ்ட் கட்சி (ஆர்கேபி) பெர்ன், பர்க்டார்ஃப்  நகரில் 342 பிரதிநிதிகள் கொண்ட மாநாட்டில் உருவாக்கப்பட்டது. செயலாளராக டெர்சு ஹெரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏகாதிபத்தியப் போர், பணவீக்கம், பருவ நிலை நெருக்கடி மற்றும் பாலஸ்தீனப் பிரச்ச னை ஆகியவை மாநாட்டின் முக்கிய தலைப்புகளாக இருந்தன. சுவிஸ் பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்து போராட்டத்தை தீவிரப்படுத்த ஆர்கேபி முடிவு செய்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக  உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இயக்கங்களுடன் இணைந்து செயல்படும் நோக்கில் கட்சியின் மாநாட்டை ஜூன் 10 முதல் 15 வரை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமூக ஜனநாயகக் கட்சியுடன் (எஸ்.பி) நெருக்கமாகப் பணியாற்றி னர். 1945 இல், அரசாங்கம் அமைப்புகளின் மீதான தடையை நீக்கியது. எஸ்.பி உடனான இணைப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 1944 இல் தொழிலாளர் கட்சியில் (பிடிஏ) கம்யூனிஸ்டுகளின் புதிய கூட்டு இயக்கம் உருவானது. இந்த பின்னணியில் சுவிட்சர்லாந்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மீட்டமைக்கப்பட்டுள்ளது.

;