world

பறவைக் காய்ச்சலால் உலகில் முதல் மனித மரணம்

மெக்ஸிகோ சிட்டி,ஜூன் 6- மெக்சிகோவில் பறவைக் காய்ச்ச லின் துணைவகை நோயால் உலகின் முதல் மனித மரணம் கடந்த ஏப்ரல் 24 அன்று ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

விலங்குகளுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத 59 வயதான மெக்ஸி கோ பெண் ஒருவர் எச்5என்2 நோய் தொற்றால் பலியாகியுள்ளார். ஏப்ரல் 24 அன்று மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவர்  அன்றைய தினமே மரணமடைந்துள்ளார்.

மெக்சிகோவில் கோழிகளில் இன்ஃ ப்ளூயன்ஸா ஏ {A(H5N2)} துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த  வைரஸ் பறவைகளில் இருந்து மனிதர் களுக்கும் பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பில் இல்லாத மனிதர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

பறவைகள், விலங்குகளுடன் தொடர்பில் இல்லாத 59 வயதான மெக்சிகோ பெண்ணுக்கு  கடந்த ஏப்ரல் மாதம் 17 அன்று கடுமையான வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் வந்துள் ளன. அவர் ஏப்ரல் 24 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றே  மரணமடைந்துள் ளார். அவர் மரணத்திற்கு காரணம் இந்த துணை வைரஸ் தான் என தற்போது உலக சுகாதார அமைப்பு உலகிற்கு தெரிவித்துள்ளது. 

மேலும் இது மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

அவர் மரணத்திற்குப் பின் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில்  இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்  அல்லாத தொற்று எனக் கூறப்பட்ட  நிலையில் மே மாதம் மேற்கொள்ளப் பட்ட இரண்டாம் கட்ட ஆய்வில் அது  இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் துணை வகை வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

;