world

img

தீக்கதிர் உலக செய்திகள்

2025: எண்ணெய் தேவை அதிகரிக்கும் 
2025 ஆம் ஆண்டு தினசரி 18 லட்சம் பீப்பாய் எண்ணெய் தேவைப்படும் என்றும் 2024 - 2025 ஆம் ஆண்டு ஒபெக் அமைப்பில் இல்லாத  நாடுகளின் எண்ணெய் தேவை நாளொன்றுக்கு 13 லட்சம் பீப்பாயாக இருக்கும் என்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்ட மைப்பு மதிப்பிட்டுள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்கும் சூழலில் இந்த மதிப்பீடு புதிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 

பிரிக்ஸ் புதிய நாணயம்  
பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய நாணயம் விரைவில் வெளி யாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் அந்த புதிய நாணயம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப் பின் நிறுவன நாடுகளான 5 நாடுகளில் 3 நாடுகள் சர்வதேச சந்தையில் அமெரிக்க நாணயத்தி ற்கு சவால் விடும் வகையில் புதிய நாணயத்தை அறிமுகப் படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா மற்றும் சீனாவின் பதிலுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவை எதிர்த்தால் தீவிரவாதி 
இஸ்ரேல் பாலஸ்தீனர்களை  இனப்படுகொலை  செய்ய அமெரிக்கா அனைத்து உதவிகளை யும் வருகிறது. இந்த இனப்படுகொலை யை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் செல்லும் கப்பல்களை ஏமன் ஹவுதி அமைப்பு சிறைப்பிடித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க கூட்டு கடற்படை, ஹவுதி படைத்தளங்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதால் தங்களுக்கு எதிராக இருக்கும் காரணத்திற்காக ஹவுதிகளை தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது.