ஆசிய - பசிபிக் நேட்டோவை உருவாக்க அமெரிக்கா முயற்சி ஆசிய - பசிபிக் நேட்டோவை உருவாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் சீன முப்படை தலைமை தளபதி ஜிங் ஜியான் பெங் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேட்டோ படைகள் மூலம் மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா செயல்பட்டு வருவது போல இந்திய பசிபிக் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஆசிய பசிபிக் நேட்டோவை உருவாக்க முயற்சிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெள்ளம்: 15 பேர் பலி
பெருமழையின் காரணமாக இலங்கை யில் ஏற்பட்டுள்ள பேரழிவில் 15 பேர் பலியாகியுள்ளனர். 4,000 வீடுகள் சேத மடைந்துள்ளன எனவும் 5,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 19,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்க ளில் 300 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள் ளது. மேலும் 20 மாவட்டங்கள் மழையால் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் குடிமக்களுக்கு மாலத்தீவு தடை
இஸ்ரேல் குடிமக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க மாலத்தீவு அர சாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஜனா திபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும் அவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்ய தேவையான சட்ட திருத்தங்க ளையும் மேற்கொள்ள உள்ளதாக அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஐ.நா நிவாரண மையத்திற்கு உதவ நிதி திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளது.
ஆட்சியை கவிழ்ப்போம் என நேதன்யாகுவிற்கு எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டால் ஆட்சியை கவிழ்ப் போம் என இஸ்ரேல் அமைச்சர்கள் மிரட்டி யுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டுமென உலக நாடுகள் அழுத்தம் கொ டுத்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் நிதித்துறை அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், பாதுகாப்புத் துறை அமைச்சர் இதாமர் பென் ஜிவிர் ஆகியோர் போர் நிறுத்தம் மேற்கொண்டால் ஆட்சியை கவிழ்ப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி
பாகிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட 1.65 கோடி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் சிந்து பகுதியில் இந்த ஆண்டு போலியோ தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து நாட்களில் 33 மாவட்டங்களில் முழுமையாகவும், 30 மாவட்டங்களில் 50 சதவீதமும் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு
மத்திய கிழக்கில் அமைதியை உறுதி செய்வ தற்காக அனைத்து நாடுகளும் பாலஸ்தீ னத்தை அங்கீகரிக்க வேண்டும் என ஐ.நா. நிபு ணர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது. பாலஸ்தீன மனித உரிமைகள் நிலைமை ஐ.நா. சிறப்பு அறிக் கையாளர் உட்பட பலரும் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது என்பது பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் மற்றும் அதற் கான அவர்களின் போராட்டத்தின் முக்கியமான அங்கீகாரம் என்றும் தெரிவித்துள்ளனர்.