காசா,நவ.23- காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையை நான்கு மணி நேரத்தில் அனைவரும் காலி செய்ய வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் மிரட்டியதாக காசா சுகாதாரத் துறை அமைச்சர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையில், குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் அதிகமானோரையும், உயிரை பாதுகாத்துக்கொள்ள தஞ்ச மடைந்த 1000 க்கும் மேற்பட்டோ ரையும் நான்கு மணி நேரத்தில் மருத்துவ மனையை விட்டு வெளியேற வேண டும் என இஸ்ரேல் மிரட்டியுள்ளது.
இதையடுத்து ஏற்கனவே சுமார் 450 நோயாளிகள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.இந் நிலையில் தற்போது மேலும் 200 நோயாளிகள் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருப்பதாக வும் அவர்களும் வெளியேற்றப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரி வித்துள்ளார்.
காசாவில் அல்-ஷிபா மற்றும் இந் தோனேசிய மருத்துவமனை ஆகிய இரண்டையும் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து முற்றுகை யிட்டுள்ளதால் இரு மருத்துவமனை களும் மிகவும் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளன.
மேலும் அல்-ஷிபா மருத்துவ மனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா மற்றும் பல மூத்த மருத்து வர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. இதை இஸ்ரேலிய ஒளி பரப்பு ஆணையமும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் போர் விதி மீறல்களால் பாலஸ்தீன காசா பகுதியில் பத்திரிகையாளர்கள் மருத்துவர்கள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தெளி வாகத் தெரிய வந்துள்ளது.