புதுதில்லி, நவ. 14 - தென் கிழக்கு இலங்கை கடற்பகுதி யில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தலைநகர் கொழும்புவில் இருந்து ஆயிரத்து 326 கிலோ மீட்டர் தொலை வில் தென் கிழக்கு இலங்கை கடற்பகு தியில், பிற்பகல் 12.31 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கடற்பரப்பில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில், 6.2 என்ற ரிக்டர் அள வில், இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரி விக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாத நிலையில், இந்த நில அதிர்வால் தமிழ கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால், திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.